தேர்வு சீர்திருத்தப் பணிக்குழுவுக்கு இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமை தாங்குகிறார்
தேர்வுகளின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டை மேலும் வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேர்வு முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு அமைக்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
தேர்வுகளின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டை மேலும் வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் புதிய சட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.
எதிர்காலத் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் தேவையான சீர்திருத்தங்களை இந்தப் பணிக்குழு விரைவில் பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





