மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புதிய சீன தூதுவருக்கும் இடையிலான விசேட சந்திப்பு
நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தார்.
புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் வெய் ஹீஆஷியாங்க்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான ஒரு சுமூகமான சந்திப்பு 09-09-2026அன்று கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி தனது நற்சான்றிதர்களைச் சமர்ப்பித்ததன் பின்னர், இலங்கையின் சீனத் தூதுவராகக் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள தூதுவருக்கு முன்னாள் ஜனாதிபதி தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது, சீன நாகரிகத்தின் ஆழமான பொருளை மிக நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்கும் பாரம்பரிய சீன ஓவியங்கள் அடங்கிய நூலொன்றை தூதுவர் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.
இலங்கையின் கலாச்சாரத்தையும் மக்களையும் மனதார ஏற்றுக்கொண்டு, நட்புறவுடனும் மூலோபாயக் கூட்டாண்மையுடனும் இரு நாடுகளும் இதுவரை கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்து சீன அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.





