முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியலில்
விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை விசாரணை அதிகாரிகள் மன்றில் சமர்ப்பித்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய காலப்பகுதியில் ஜனாதிபதி செலவு தொடர்பான விடயதானத்தின் கீழ் இரண்டு பதவிகளுக்கான சம்பளங்களைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் 09-09-2026 அன்று உத்தரவிட்டது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை விசாரணை அதிகாரிகள் மன்றில் சமர்ப்பித்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய காலப்பகுதியில், ஜனாதிபதி செலவு தொடர்பான விடயதானத்தின் கீழ் மற்றொரு பதவிக்காகவும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டமை தொடர்பிலான நிதி சான்றுகளையும் விசாரணை அறிக்கைகளையும் பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரின் விளக்கமறியலை நீடிப்பதற்கு உத்தரவிட்டார்.





