இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான சுமனதாசவிடம் 3 மணி நேரம் விசாரணை
ஆணைக்குழு விடுத்திருந்த அழைப்பானைக்கமைய வாக்குமூலம் ஒன்றை அளிப்பதுக்காக அவர் 10-09-2026 அன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேற்றைய தினம் ஆஜரான முன்னாள் அரச சோதிடரான சுமனதாச அபேகுணவர்தன, சுமார் மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவின் 'சிரிலிய சவிய' அமைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, ஆணைக்குழு விடுத்திருந்த அழைப்பானைக்கமைய வாக்குமூலம் ஒன்றை அளிப்பதுக்காக அவர் 10-09-2026 அன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரச சோதிடராகச் செயற்பட்டதாகக் கூறப்படும் சுமனதாச அபேகுணவர்தன, குறித்த அமைப்பின் நிதி முறைகேடுகள் மற்றும் விசாரணைகளுக்கு அமைவாக தனது வாக்குமூலத்தை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார். முன்னதாக, பசில் ராஜபக்ஷ மற்றும் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருகுமார் நடேசன் ஆகியோருக்கு சொந்தமானதல்ல எனத் தெரிவித்து கைவிடப்பட்ட, 'மல்வானை மாளிகை' எனப் பிரபலமடைந்த சொகுசு வீடு நிர்மாணிக்கப்பட்ட போது, அதற்கான சுப முகூர்த்தங்களை நிர்ணயிக்கும் பணிகளைத் தானே மேற்கொண்டதாக சுமனதாச அபேகுணவர்தன அது தொடர்பான விசாரணைகளின் போது தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





