பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயருக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்
நிதி மோசடி மற்றும் அதற்கான போலி ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பில் பண்டாரவளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் 09-09-2026 அன்று முன்னாள் மேயர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பண்டாரவளை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்வை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதி மோசடி மற்றும் அதற்கான போலி ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பில் பண்டாரவளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் 09-09-2026 அன்று முன்னாள் மேயர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாநகர சபையின் வருமான பரிசோதகர்கள் இருவர் மற்றும் எழுத்தாளர் பிரிவின் ஊழியர்கள் சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே முன்னாள் மேயர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் மேயரிடம் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், அவர் வியாழக்கிழமை (10) பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதிவான் அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.





