முதன்மை பணவீக்கம் 2.3 சதவீதமாக உயர்வு கல்வி, சுகாதார பணவீக்கம் வீழ்ச்சி
வீடமைப்பு,நீர்,மின்வலு, எரிவாயு,ஏனைய பொருட்களுக்கான பணவீக்கம் கடந்த மாதம் 0.1 சதவீதமாக காணப்பட்ட நிலையில் இம்மாதம் 1.6 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
2025 டிசெம்பர் மாதம் 2.1 சதவீதமாக காணப்பட்ட முதன்மை பணவீக்கம் இம்மாதம் (ஜனவரி) 2.3 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. அதேபோல் உணவு பணவீக்கம் கடந்த மாதம் 3.0 சதவீதமாக காணப்பட்ட நிலையில் இம்மாதம் 3.3 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
உணவல்லாத பணவீக்கத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. சுகாதாரம்,கல்வி ஆகிய துறைகளுக்கான பணவீக்கம் இந்த மாதம் குறைவடைந்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கொழும்பு நகர் பிரதேசங்களின் மாதாந்த நுகர்வோர் பணவீக்கத்தை முன்னிலைப்படுத்தி, 2025 டிசெம்பர் மாதத்துக்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் குறிகாட்டியுடன் 2026 ஜனவரி மாதத்துக்கான பணவீக்கம் தொடர்பான விபரத்தை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய கடந்த டிசெம்பர் மாதம் 2.1 சதவீதமாக காணப்பட்ட முதன்மை பணவீக்கம் இம்மாதம் (ஜனவரி) 2.3 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
அதேபோல் உணவு பணவீக்கம் கடந்த மாதம் 3.0 சதவீதமாக காணப்பட்ட நிலையில் இம்மாதம் 3.3 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.உணவல்லாத பணவீக்கத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.இரண்டு மாதங்களுக்கும் 1.8 சதவீதமாகவே காணப்படுகிறது.
மதுசார பானங்கள்,புகையிலை ஆகியவற்றுக்கான பணவீக்கம் கடந்த மாதம் 4.9 சதவீதமாக காணப்பட்ட நிலையில் இந்தமாதம் 3.5 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
வீடமைப்பு,நீர்,மின்வலு, எரிவாயு,ஏனைய பொருட்களுக்கான பணவீக்கம் கடந்த மாதம் 0.1 சதவீதமாக காணப்பட்ட நிலையில் இம்மாதம் 1.6 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
அதேபோல் தளபாடம், குடித்தன உபகரணங்களுக்கான பணவீக்கம் கடந்த மாதம் 3.7 சதவீதமாக காணப்பட்ட நிலையில் இம்மாதம் 1.1 சதவீதமாக குறைவடைந்துள்ளது.சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கான பணவீக்கம் கடந்த மாதம் முறையே 4.9 சதவீதம்,5.7 சதவீதம் என்ற அடிப்படையில் காணப்பட்ட நிலையில் இம்மாதம் அவை முறையே 4.2 சதவீதம் மற்றும் 3.9 சதவீதம் என்ற அடிப்படையில் காணப்படுகிறது.





