தெவிநுவர பெரஹெரவில் சிலர் போதைப்பொருட்களுடன் கைது
நேற்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெவிநுவர உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த பெரஹெரவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த பல காவடி நடனக் குழுக்களின் உறுப்பினர்கள் சிலர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இம்முறை வருடாந்த ஈசல மகா பெரஹெர வீதி உலா வர திட்டமிடப்பட்டிருந்த நிலையிலே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர எசல பெரஹெரவின் பாதுகாப்புக்காக பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரின் சுமார் 1,500 உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், ஊர்வலத்தில் பங்குபற்றும் அனைத்துக் காவடி குழுக்களையும் உடனுக்குடன் விசேட சோதனைக்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெவிநுவர உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த பெரஹெரவுக்கு காவடி குழுக்களைப் பங்கேற்கச் செய்வது தொடர்பாக இரு பாதாள உலகக் குழுத் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தேவாலயத்துக்கு அருகில் அமைந்திருந்த வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்தது.
உருவான இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேவாலயத்தின் வருடாந்த பெரஹெரவில் காவடி நடனக் குழுக்கள் ஊர்வலமாகச் செல்வதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபரினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்தறை மாவட்ட செயலாளருக்குப் பரிந்துரையொன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.





