செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏற்பு இணை அமைச்சராக விஜய் தணிகாசலம்
2023 ஆம் ஆண்டில் ஒன்றாரியோ அமைச்சரவையில் பதவி வகித்த முதலாவது தமிழர் என்ற பெருமைக்கும் உரியவராவார்.
கனடாவின் ஒன்றாரியோ மாகாண முதலமைச்சர் டக் ஃபோர்ட்டினால் இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட விஜய் தணிகாசலம் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏற்பு தொடர்பான முதலாவது இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்புக்கும், மாநிலத்தின் முன்னேற்றத்தை இலக்காகக்கொண்ட அவரது பங்களிப்புக்குமான அங்கீகாரமாக அமைந்திருக்கிறது.
அதேவேளை இந்த அமைச்சு உருவாக்கமானது தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகின்றன என்பதையும் பொருளாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் எதிர்கால வாய்ப்புகளுக்குத் தயார்ப்படுத்தல் என்பவற்றுக்கான தலைவர்களின் அர்ப்பணிப்பையும் காண்பிக்கிறது.
இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் 2018 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மூன்றாவது தடவையாக ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதியின் ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினராக இயங்கிவருவதுடன், 2023 ஆம் ஆண்டில் ஒன்றாரியோ அமைச்சரவையில் பதவி வகித்த முதலாவது தமிழர் என்ற பெருமைக்கும் உரியவராவார்.
அதன்படி அவர் 2023 ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறைக்கான இணை அமைச்சராகவும், 2024 ஆம் ஆண்டு வீடமைப்பு வசதிக்கான இணை அமைச்சராகவும், அண்மையில் சுகாதார இணை அமைச்சராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.





