Breaking News
வலுவடைந்தது ரூபாவின் பெறுமதி
மத்திய வங்கியின் தரவுகளின்படி நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.34 ரூபாவாகவும், விற்பனை விலை 336.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணயமாற்று விகிதங்களின்படி, கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு எதிராக வீழ்ச்சியைப் பதிவுசெய்த இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது.
மத்திய வங்கியின் தரவுகளின்படி நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.34 ரூபாவாகவும், விற்பனை விலை 336.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் கடந்த வெள்ளிக்கிழமை (12) முறையே 331.42 மற்றும் 341.36 ரூபாவாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.