இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்
ஆளும் தேசிய கட்சி மட்டுமின்றி, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 93 உறுப்பினர்களும், எதிராக 29 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த வாக்கெடுப்பு நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 93 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 29 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன்மூலம், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை இந்த ஒப்பந்தம் பெற்றுள்ளது. ஆளும் தேசிய கட்சி மட்டுமின்றி, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
மட்பாண்டப் பொருட்கள், தரைவிரிப்புகள், வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுக்கு நியூசிலாந்து 10% வரை இறக்குமதி வரி விதித்து வந்தது. மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்ய நியூசிலாந்து உறுதியளித்துள்ளது.





