வழக்கை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர ஞானசார தேரர் தீர்மானம்
வழக்கு விசாரணைகளுக்காக நேற்றைய தினம் பிரதிவாதியான கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டி சட்டமா அதிபரால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு 16-09-2026அன்று தெரியப்படுத்தியிருந்தார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஞானசார தேரரின் சட்டத்தரணியினால் இந்த விடயம் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணைகளுக்காக நேற்றைய தினம் பிரதிவாதியான கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இதன்போது பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி சஞ்சய மாரம்பேயுடன் ஆஜரான சட்டத்தரணி அசோக வீரசூரிய, தனது சேவைபெறுநரான ஞானசார தேரர் இந்த வழக்கு நடவடிக்கைகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர எதி்ர்பார்ப்பதாக மன்றில் தெரிவித்தார்.





