அரசாங்கம் இரட்டைவேடம்; முஜிபுர் ரஹ்மான் எம்.பி
அருகம்பை பிரதேசத்தில் இஸ்ரேல் இனத்தவர்கள் சட்டவிராேத போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக ஆங்கில பத்திரிகை ஒன்று நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது.
இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்களை தொலைபேசியில் வைத்திருந்த குற்றத்துக்காக மாவனெல்லையை சேர்ந்த 21வயதுடைய இளைஞன் சுஹைல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு கடந்த 8 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அரசாங்கம் இஸ்ரேல் பலஸ்தீன் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றி வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தாார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
மானெல்லையைச்சேர்ந்த 21வயது இளைஞன் தெஹிவளையில் அமைந்துள்ள இஸ்ரேல் இனத்தவர்களுக்கு உரித்தான சபாட் கட்டிடத்துக்கு அருகாமையில் நடந்து சென்றபோது, அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது, அவரிடம் தேசிய அடையாள அட்டை இருக்கவில்லை என்பதற்காக கைதுசெய்து தெஹிவலை நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தி இருக்கிறனர். பின்னர் குறித்த இளைஞனின் வீட்டுக்கு இதுதொடர்பாக தகவல்வழங்கியபோது, இளைஞனின் தந்தை தேசிய அடையாள அட்டையை கொண்டுவந்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உறுதிப்படுத்திய பின்னர் இளைஞன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு, தனது விட்டை நோக்கி சென்றுள்ளார்.
என்றாலும் குறித்த இளைஞன் வீட்டுக்கு சென்றடைய முன்னர் அங்குவந்த தெஹிவலை பொலிஸார், அந்த இளைஞனின் சமூகவலைத்தலத்தலத்திலோ கையடக்க தொலை பேசியிலோ இஸ்ரேலுக்கு எதிரான வாசங்கள் இருப்பதாக தெரிவித்து, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அன்று இரவே கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
தெஹிவளை அல்விஸ் பிளேசில் அமைந்துள்ள இஸ்ரேல் இனத்தவர்களுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள அவர்களின் நிலையம் தொடர்பில் பிரதமரிடம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, அந்த இரண்டு கட்டிடங்களும் சட்டவிராேதமானது என பதிலளித்தார். ஆனால் இந்த சட்டவிராேத மத்திய நிலையத்துக்கு அருகாமையில் செல்லும்போதே நாட்டு பிரஜையான குறித்த இளைஞன் கைதுசெய்யப்படுகிறார். அப்படி எவ்வாறு முடியும்.? தேசிய அடையாள அட்டை இருக்கவில்லை என நாட்டு பிரஜையை கைது செய்கிறார்கள். ஆனால் சட்டவிராேத மத்திய நிலையத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குகிறார்கள். அதனால் அரரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை என்ன என ஜனாதிபதியிடம் கேட்கிறோம்.
அதேநேரம் அருகம்பை பிரதேசத்தில் இஸ்ரேல் இனத்தவர்கள் சட்டவிராேத போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக ஆங்கில பத்திரிகை ஒன்று நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது. அதேபோன்று இவர்கள் எமது நாட்டில் பல்வேறு இடங்களில் சட்டவிராேதமான முறையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அரசாங்கம் இதனை தடுத்து நிறுத்த, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பின்வாங்கி வருகிறது. அரசாங்கம் யாருக்கு பயப்படுகிறது என்பதே எமக்குரிய கேள்வியாகும்.
அரசாங்கம் கடந்த காலங்களில் பலஸ்தீீனுக்காக செயற்பட்டுவந்த நடவடிக்கைகள் தற்போது நீத்துப்போயுள்ள. இஸ்ரேலுக்கு எதிரான படங்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருப்பவர்களை கைது செய்கிறார்கள். ஆனால் இஸ்ரேல் இனத்தவர்கள் நாட்டுக்குள் மேற்கொள்ளும் சட்டவிராேத நடவடிக்கைகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை. அரசாங்கத்துக்கு இவ்வாறு அழுத்தம் கொடுப்பது இஸ்ரேலா? அமெரிக்காவா?. அரசாங்கம் இஸ்ரேல் பக்கம்தான் இருப்பதாக இருந்தால் அதனை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
ஆனால் அரசாங்கம் இஸ்ரேல், பலஸ்தீன் பிரச்சினையில் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றி வருவதாகவே தெரிகிறது. பகலில் பலஸ்தீீனுக்கு ஆதரவாக இருப்பதுபோல் செயற்படுகின்றனர். இரவு நேரத்தில் இஸ்ரேலுடன் மறைமுக தொடர்புகளை வைத்துக்கொண்டு வருகிறது. இவ்வாறு இரட்டை நிலைப்பாட்டை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றார்.





