அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு பிடியாணை
மேற்படி வழக்கில் கைதான நயோமாலி விஜேநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டதை அடுத்து வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோருக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு கோட்டை நீதிவான் பசன் 16-09-2026 அன்று அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற சர்ச்சைக்குரிய இலஞ்சக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் இவ்வாறு உத்தரவிட்டிருந்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த கபில சந்திரசேன கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கடந்த மே மாதம் 8 ஆம் திகதி அன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
மேற்படி வழக்கில் கைதான நயோமாலி விஜேநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டதை அடுத்து வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோர் சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்காக பிணையாளர்களாக முன்னிலையாகியிருந்தனர்.





