இலங்கைக்கு தீர்வையின்றி பிரிட்டன் சந்தைகளை அணுகும் வாய்ப்பு
உலகளாவிய ரீதியில் வேறெந்தவொரு நாட்டிலிருந்தும் ஆடையுற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்களை 100 சதவீதம் திரட்டிக்கொள்ளவும் முடியும்.
பிரிட்டனின் தாராளமயப்படுத்தப்பட்ட வர்த்தகத் திட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து இலங்கையின் ஆடையுற்பத்தியாளர்கள் முன்னொருபோதுமில்லாத வகையில் பிரிட்டனின் சந்தைகளை அணுகுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
பிரிட்டனின் இத்தாராளமயப்படுத்தல் மறுசீரமைப்பின் மூலம் இலங்கையின் ஆடையுற்பத்தியாளர்களால் பிரிட்டனின் சந்தைக்குள் தீர்வையற்ற அணுகலை உறுதிப்படுத்திக்கொள்ளவும், உலகளாவிய ரீதியில் வேறெந்தவொரு நாட்டிலிருந்தும் ஆடையுற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்களை 100 சதவீதம் திரட்டிக்கொள்ளவும் முடியும்.
பிரிட்டனின் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின்கீழ் இலங்கை 'விரிவுபடுத்தப்பட்ட முன்னுரிமை' எனும் வகைப்படுத்தலின் கீழான நலனைப் பெற்றுள்ளது. இதன்பிரகாரம் ஆடையுற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்கள் தெற்காசியப்பிராந்திய நாடுகளிடமிருந்து பெறப்படுமாயின், தீர்வையின்றி பிரிட்டன் சந்தைக்குள் நுழைவதற்கான வாய்ப்பு இலங்கைக்குக் கிட்டும்.





