Breaking News
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுகிறார்
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த வைப்புத் தொகையை ஏற்கனவே செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சனியன்று உறுதிப்படுத்தினார். சிறிது நேரத்திற்கு முன்னர் காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த வைப்புத் தொகையை ஏற்கனவே செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை (26) ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் பிணை முறிகளை வழங்கினார்.