பசிபிக் பெருங்கடலில் ஜப்பானுக்குக் கீழே சூறாவளி: வளிமண்டலவியல் திணைக்களம்
ஊவா மற்றும் கிழக்கு மாகணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
பசிபிக் பெருங்கடலில் ஜப்பானுக்குக் கீழே சூறாவளி ஒன்று உருவாகி வருவதாகவும் அதன் காரணமாக எதிர்வரும் 6 ஆம் திகதிக்குப் பின்னர் மீண்டும் மழை வீழ்ச்சி அதிகரிக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் 03-08-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை தொடர்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது. மத்திய மலைநாட்டு பகுதிகளிலும், இரத்தினபுரி, அவிசாவளை ஆகிய பகுதிகளுக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளன.
காலநிலை குறித்து விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் இன்றைய தினம் 100 மி.மி. அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும்.
ஊவா மற்றும் கிழக்கு மாகணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்தில் ஒருசில பகுதிகளிலும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
எவ்வாறாயினும் தற்போது பசிபிக் பெருங்கடலில் ஜப்பானுக்குக் கீழே சூறாவளி ஒன்று உருவாகி வருவதாகவும், அதன் காரணமாக 6 ஆம் திகதிக்குப் பின்னர் மீண்டும் மழை வீழ்ச்சி அதிகரிக்ககூடும். இதன்படி, மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுப் பகுதிகளில் ஓரளவுக்கு மழை பெய்யக்கூடும்.குறிப்பாக மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யக்கூடும்
நாட்டின் ஊடான காற்று வீச்சும் வேகமடைந்து 6 ஆம் திகதிக்குப் பிறகு மீண்டும் சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். குறிப்பாக மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.





