முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி விசாரணை
இவ்வழக்கு கொழும்பு கோட்டை நீதிவான் பசந்த அமரசேன முன்னிலையில் 16-09-2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டவிரோதமான முறையில் ஆடம்பர மோட்டார் வாகனமொன்றை வைத்திருக்க முயன்ற சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கு கொழும்பு கோட்டை நீதிவான் பசந்த அமரசேன முன்னிலையில் 16-09-2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், இவ்வழக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அடங்கும் ஒன்று எனச் சுட்டிக்காட்டினார். விடயங்களை ஆராய்ந்த நீதிவான் வழக்கை மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.





