வருடத்தில் மாகாண சபைகள் தேர்தலை நடத்த நடவடிக்கை: அமைச்சர் விஜித ஹேரத்
ஜீவன் தொண்டமான் எம்,பி, தனத் கேள்வியின்போது, ஜெனீவாவில் மாகாண சபைகள் தொடர்பில் எல்லை நிர்ணயங்கள் குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரால் குறிப்பிடப்பட்டிருந்து.
எல்லை நிர்ணய பணிகள் முடிவடைந்த பின்னர் அடுத்த வருடத்தில் மாகாண சபைகள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் எல்வலை நிர்ணய பணிகள் முடிவடைந்த பின்னர் பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் வரையில் எந்த முறையில் அந்தத் தேர்தல் நடத்தப்படும் என்று இப்போதே கூற முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் 09-10-2025அன்று ஜெனிவா தீர்மானம் தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத்தின் உரையை தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளரும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினருமான ஜீவன் தொண்டமானால் மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜீவன் தொண்டமான் எம்,பி, தனத் கேள்வியின்போது, ஜெனீவாவில் மாகாண சபைகள் தொடர்பில் எல்லை நிர்ணயங்கள் குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரால் குறிப்பிடப்பட்டிருந்து. அதன்படி எல்லை நிர்ணய நடவடிக்கைக்கான கால அளவு எவ்வளவு என்ன என கேட்கிறேன் என்றார்.
இதற்கு அமைச்சர் தொடர்ந்து கூறுகையில்,
எல்லை நிர்ணய நடவடிக்கை தொடர்பான பணி பாராளுமன்றத்தினுடையது. அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அந்த நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் அடுத்த வருடத்தில் தேர்தல் நடக்கும். எல்லை நிர்ணய நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் புதிய முறையிலா? அல்லது பழைய முறையிலா? தேர்தலை நடத்துவது என்று முடிவு செய்யப்படும். எவ்வாறாயினும் பாராளுமன்றமே அதனை தீர்மானிக்கும் என்றார்.





