ஷஷீந்திரவுக்கு விளக்கமறியல் 14 நாட்களுக்கு நீடிப்பு
கொழும்பு பிரதான நீதிவான்வான் நீதிமன்றத்தில் அவரை சிறை அதிகாரிகள் நேற்று(29) முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகமவால் பிறப்பிக்கப்பட்டது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷவை அவருக்கு எதிரான வழக்கிலிருந்த்து விடுவிக்க முன் வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ரம் 29-08-2025 அன்று நிராகரித்தது.
கொழும்பு பிரதான நீதிவான்வான் நீதிமன்றத்தில் அவரை சிறை அதிகாரிகள் நேற்று(29) முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகமவால் பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க. எஸ். போதரகம உத்தரவிட்டார்.
மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் உள்ளிட்ட சொத்துக்கள் போராட்டத்தின் போது சேதமாக்கப்பட்டதாக தெரிவித்து 88 இலட்சம் ரூபாவிற்கு மேல் நட்டஈடு பெற்றமை தொடர்பாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஸ கடந்த 06ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவர் மீது பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டம் மற்றும் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.