ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் பைஸ் ஹமீத் இராணுவத்தால் கைது
பாகிஸ்தான் ராணுவ சட்டத்தின் கீழ் லெப்டினன்ட் ஜெனரல் பைஸ் ஹமீத் (ஓய்வு) மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீத் வீட்டுவசதி திட்ட ஊழல் தொடர்பாக அந்நாட்டின் சக்திவாய்ந்த இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் இராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவு திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் (ஓய்வு) க்கு எதிராக செய்யப்பட்ட டாப் சிட்டி வழக்கில் புகார்களின் சரியான தன்மையைக் கண்டறியப் பாகிஸ்தான் இராணுவத்தால் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவ சட்டத்தின் கீழ் லெப்டினன்ட் ஜெனரல் பைஸ் ஹமீத் (ஓய்வு) மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓய்வுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவச் சட்டத்தை மீறிய பல சம்பவங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன. பீல்ட் ஜெனரல் கோர்ட் மார்ஷல் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் (ஓய்வு) இராணுவக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என்று அது மேலும் கூறியது.





