ஐக்கிய மக்கள் சக்தியால் சபாநாயகரிடம் பிரேரணை
குறித்த பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.
நீதிமன்ற முறைமையில் குவிந்து கிடக்கும் வழக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியால் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்கக் கோரி 04-08-2026 அன்று சபாநாயகரிடம் பிரேரணை கையளிப்பட்டது.
இலங்கை நீதிமன்ற முறைமையில் தற்சமயம் 1.1 மில்லியன் வழக்குகள் குவிந்து கிடப்பதாக நீதி அமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டுவதால், இந்த வழக்குகளின் செயலாக்கத்தை விரைவுபடுத்துவதற்கான பிரேரணையை பெறுவதற்கு பாராளுமன்றத்தில் விசேட குழுவொன்றை நியமிக்கக் கோரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழு பிரேரணையொன்றில் கையெழுத்திட்டது.
குறித்த பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். இவ்வாறு கையெழுத்திட்ட குறித்த பிரேரணையை நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கையளித்தனர்,





