Breaking News
கொச்சிக்கடை பொலிஸில் சரணடைந்த லன்சா கைது
நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதிவரை விளக்கமரியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா, கொட்ச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி 29-08-2025 அன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதிவரை விளக்கமரியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா மற்றும் நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான இல. 58, நீர்கொழும்பு வீதி, கொச்சிக்கடையில் வசிக்கும் பந்துல நாவுதுன்ன ஆகியோரை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள பீ 1024/ 2006 எனும் வழக்கு தொடர்பில் சந்தேக நபர்களாக பெயரிட்டு சட்ட நடவடிக்கை எடுக்க சட்ட மா அதிபர் ஆலோசனையளித்துள்ளார்.





