தாய்,சேய் நல மருத்துவ பிரிவு சிறந்த நிலையில் உள்ளது: அமைச்சர் நளிந்த
புதிய அரசாங்கத்தின் சுகாதாரக் கொள்கையின் முதல் கட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்களை நிறுவ அமைச்சு திட்டமிட்டுள்ளது.
மக்களுக்கு சுகாதார சேவைகளை சிறந்த முறையில் வழங்கியதன் காரணமாக நாட்டில் தாய்,சேய் நலம் சம்பந்தமான மருத்துவ பிரிவு மிக சிறந்த நிலையில் உள்ளதாகவும், இதே போல் மற்றைய சுகாதார துறைகளும் வளர்ச்சி அடையவேண்டும் என்பதற்காகவே நல்வாழ்வு மையத் திட்டம் தொடங்கப்பட்டது என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டுதலின் கீழ், நாட்டில் வாழும் மக்கள் கண்ணியமான முறையில் சுகாதாரசேவையை எளிதில் பெற்றுக்கொள்ளகூடியவகையில் உறுதிசெய்வதற்காக, புதிய அரசாங்கத்தின் சுகாதாரக் கொள்கையின் முதல் கட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்களை நிறுவ அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஐந்தாவது சுகாதார மையமான மாத்தளை மாவட்டத்தில் உள்ள தங்கந்த சுகாதார ஆரோக்கிய மையம் , சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் சமீபத்தில் பொதுமக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆரோக்கிய நல்வாழ்வு மையத்தால் வழங்கப்படும் சேவைகள் குறித்து அங்கு வருகை தந்த மக்களுக்குத் விளக்கம் அளித்த அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிக்கையில், சுகாதார மற்றும் நல்வாழ்வு மைய திட்டத்தின் முதல் மையமான காலி மாவட்டத்தில் உள்ள மாபலகம சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம் 26 ஆம் திகதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது, நான்கு அல்லது ஐந்து கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் பேர் வரை உள்ளடங்கிய மக்களுக்கு சுகாதார சேவையை வழங்க ஒரு சுகாதாரக் குழு நியமிக்கப்படும்.
நல்வாழ்வுக்கான மையம் என்றும் பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இதுவொரு மருத்துவமனை அல்ல, இதுவொரு நல்வாழ்வு மையம். மக்களுக்கு சுகாதார சேவைகளை சிறந்த முறையில் வழங்கியதன் காரணமாக நாட்டில் தாய், சேய் நலம் சம்பந்தமான மருத்துவ பிரிவு மிக சிறந்த நிலையில் உள்ளது. இதே போல் மற்றைய சுகாதார துறைகளும் இதனை போல் வளர்ச்சி அடையவேண்டும் என்பதற்காகவே நல்வாழ்வு மையத் திட்டம் தொடங்கப்பட்டது என்றார்.





