நாணய நிதியத்தை மகிழ்விக்க அரசாங்கம் மின்கட்டணத்தை அதிகரிக்கும்
சர்வதேச நாணய நிதியத்தை மகிழ்வித்து,ஐந்தாம் தவணை தொகையை பெற்றுக்கொள்வதற்காக மின்கட்டணத்தை 6 சதவீதமளவில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தை மகிழ்வித்து,ஐந்தாம் தவணை தொகையை பெற்றுக்கொள்வதற்காக மின்கட்டணத்தை 6 சதவீதமளவில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுயாதீன பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மீது நம்பிக்கை கிடையாது. பொதுமக்களின் அபிலாசைகளை கேட்பது காலத்தையும்,அரச நிதியையும் வீணடிக்கும் செயற்பாடாகும் என மின்பாவனையாளர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள மின்பாவனையாளர் சங்கத்தின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
மின்கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது.இதற்கமைய மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் மாகாண அடிப்படையில் பொதுமக்களிடமிருந்து கருத்துக்களை கேட்கிறது.
இதற்கமைய இறுதி கருத்து கோரல் எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.மின்கட்டணம் குறைக்கப்படும் என்ற தீர்மானத்தை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்காது, மாறாக மின்கட்டணத்தை அதிகரிக்க அனுமதி என்ற அறிவிப்பையே வெளியிடும்.
இறுதியாக இடம்பெற்ற மின்கட்டண திருத்தத்தின் போது மின்சார சபை 8 பில்லியன் ரூபாய் வரை இலாபடைந்திருந்தது என்று குறிப்பிட்டோம்.இருப்பினும் மின்கட்டண குறைப்புக்கு சாதகமான காரணிகள் மற்றும் தரவுகள் பற்றிய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கவனத்திற் கொள்ளவில்லை.மாறாக மின்கட்டணத்தை அதிகரிப்பதற்குரிய சாதக காரணிகளை மாத்திரமே ஆணைக்குழு ஆராய்ந்தது.
சர்வதேச நாணய நிதியத்தை மகிழ்வித்து,ஐந்தாம் தவணை தொகையை பெற்றுக்கொள்வதற்காக மின்கட்டணத்தை 6 சதவீதமளவில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுயாதீன பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மீது நம்பிக்கை கிடையாது.
அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு அமைவாகவே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு செயற்படுகிறது. மின்கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் அபிலாசைகளை கோருவது பயனற்றது என்றார்.





