Home » சட்டம் & அரசியல் » யாரையும் கண்காணிக்கவில்லை: அரசாங்கம் மறுப்பு

யாரையும் கண்காணிக்கவில்லை: அரசாங்கம் மறுப்பு

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளுக்கான சிறிலங்காவின் பிரதிநிரந்தர வதிவிடப்பிரதிநிதி டயானி மென்டிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran2 Oct 2020 10:44 AM GMT
யாரையும் கண்காணிக்கவில்லை: அரசாங்கம் மறுப்பு
Share Post

பாதுகாப்புப் படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் நாட்டில் எந்தவொரு குறிப்பிட்ட மக்கள் குழுவினரை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என சிறிலங்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கையில் சிறிலங்கா தொடர்பில் அச்சுறுத்தும் விஜயங்கள் கண்காணிப்பு துன்புறுத்தல் குறித்த முறைப்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்து வெளியிட்டுள்ள பதிலில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளுக்கான சிறிலங்காவின் பிரதிநிரந்தர வதிவிடப்பிரதிநிதி டயானி மென்டிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தும் விஜயங்கள் கண்காணிப்பு துன்புறுத்தல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சட்டஅமுலாக்கல் அதிகாரிகளிடமோ அல்லது தேசிய மனித உரிமை ஆணையகம் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு பேர்ன்றவற்றிடம் முறைப்பாடு செய்யலாம் என சிறிலங்காவின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சிறிலங்கா சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே பகிரங்கமாக நிராகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் கருத்து சுதந்திரம் சிவில் சமூகத்திற்கான தளம் ஆகியவற்றைப் பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ள டயானி மென்டிஸ் பத்திரிகையாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் சிவில் சமூகத்தினருக்கு எதிரான சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பாதுகாப்பு நலன் தொடர்பில் வழமையான பாதுகாப்பு வலையமைப்புகளை இயக்குவதற்கு அப்பால் பாதுகாப்பு தரப்பினரும் புலனாய்வு பிரிவினரும் நாட்டின் எந்த குழுவினரையும் விசேடமாக கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனவும் டயானி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் தீவிரவாத சக்திகள் நவீனவழிமுறைகளை பயன்படுத்தி வருகின்ற இந்த தருணத்தில் தனது தேசிய பாதுகாப்பு தொடர்பில் பலவீனமாக காணப்படும் எந்த நாடும் கவலைதரும் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் இதன் காரணமாக அனைத்து தரப்பினரும் இந்தச் சூழமைவின் அடிப்படையில் இந்த யதார்த்த்தினை புரிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.