விமலின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
பொலிஸ் மா அதிபர் விடுத்த பணிப்புரைக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அனுராதபுரத்தில் அண்மையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அனுராதபுரம் நகரில் இம்மாத் 12 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொதுஜனபெரமுனவின் கூட்டம் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதா? என்பது தொடர்பிலேயே மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
மேற்படி விடயம் தொடர்பில் கொழும்பு நீதிவான் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு உத்தரவிட்டிருந்தார். அதற்கமைய பொலிஸ் மா அதிபர் விடுத்த பணிப்புரைக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் நாற்களில் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்துக்கு விமல் வீரவன்ச அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.





