Breaking News
துருக்கி பள்ளி அருகே துப்பாக்கிச் சூடு: 11 பேர் காயம்
தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் 15 வயது மாணவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேற்கு துருக்கியின் மனிசா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி அருகே செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் 15 வயது மாணவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மாணவர் தனது தாத்தா, பாட்டி வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மாணவர் பள்ளியில் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவரின் பெற்றோரும் துப்பாக்கியின் உரிமையாளரான அவரது தாத்தாவும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.





