எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் முஸ்லிம் எம்.பிக்களுடன் கலந்துரையாடல்
வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை கண்டறிவதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை கண்டறிவதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.
இச்சந்திப்பின்போது, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கேட்டறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவற்றுக்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும், மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க, எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தாம் நேரடியாகத் தலையிட்டு செயலாற்றுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக்கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ரெலாே கட்சி உறுப்பினர்கள் மற்றும் அர்சுனா ராமநாதன் எம்பி, ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.





