கொழும்பில் இந்திய - இலங்கை ஆடை வர்த்தக கண்காட்சி
இந்நிகழ்வில் பல்வேறு முன்னணி ஏற்றுமதி ஊக்குவிப்பு சபைகளின் ஆதரவுடன் நிறுவப்பட்டிருந்த 'இன்க்ரெடிபிள் டெக்ஸ்டைல்ஸ் ஒஃப் இந்தியா' என்ற சிறப்பு அரங்கு முக்கிய அம்சமாக திகழ்ந்தது.
'இன்டெக்ஸ் ஸ்ரீலங்கா 2026' சர்வதேச ஆடைக் கண்காட்சியின் ஓரங்கமாக, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அனுசரணையுடன் 'வேல்ட்எக்ஸ் இந்தியா' நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய - இலங்கை ஆடை வர்த்தக கண்காட்சி நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (6) கொழுமு;பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுமார் 80 க்கும் மேற்பட்ட இந்திய வர்த்தக நிறுவனங்கள், ஏற்றுமதி ஊக்குவிப்பு சபைகள் மற்றும் தொழிற்துறை அமைப்புக்கள் பங்கேற்று, இந்திய ஆடையுற்பத்தித் திறன்களைக் காட்சிப்படுத்தியிருந்தன.
இந்நிகழ்வில் பல்வேறு முன்னணி ஏற்றுமதி ஊக்குவிப்பு சபைகளின் ஆதரவுடன் நிறுவப்பட்டிருந்த 'இன்க்ரெடிபிள் டெக்ஸ்டைல்ஸ் ஒஃப் இந்தியா' என்ற சிறப்பு அரங்கு முக்கிய அம்சமாக திகழ்ந்தது.
இந்த அரங்கிற்கு நேரில் விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கண்காட்சியாளர்கள் மற்றும் தொழிற்துறைப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.