Breaking News
முன்னாள் லிபிய தலைவர் கதாபியின் மகன் சுட்டுக் கொலை
53 வயதான சைஃப் அல்-இஸ்லாம் கதாபியின் மரணம் செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
முன்னாள் லிபிய தலைவர் முஅம்மர் கதாபியின் மகனும், ஒருகாலத்தில் அவரது அரசியல் வாரிசாக கருதப்பட்டவருமான சைஃப் அல்-இஸ்லாம் கதாபி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மேற்குத் லிபியாவின் ஜிந்தான் நகரில் உள்ள அவரது வீட்டுக்குள் நான்கு ஆயுததாரிகள் புகுந்து நடத்திய நேரடி தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக அவரது அரசியல் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
53 வயதான சைஃப் அல்-இஸ்லாம் கதாபியின் மரணம் செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஏஎப்பி (AFP) செய்தி நிறுவனத்திடம் அவரது வழக்கறிஞர், நான்கு பேர் கொண்ட ஆயுதப்படை திட்டமிட்ட கொலைச் செயல்பாட்டை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.





