Home » கேளிக்கை » மாணவர்கள் மத்தியில் பாட்டுப்பாடி அசத்திய துருவ் விக்ரம்

மாணவர்கள் மத்தியில் பாட்டுப்பாடி அசத்திய துருவ் விக்ரம்

மான் கராத்தே படத்தில் இடம் பெற்ற ‘உன் விழிகளில்...’ என்ற பாடலை பாடி அசத்தி இருக்கிறார்.

👤 Sivasankaran27 Sep 2019 5:11 PM GMT
மாணவர்கள் மத்தியில் பாட்டுப்பாடி அசத்திய துருவ் விக்ரம்
Share Post

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அந்தஸ்தைப் பெற்று வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். இவர் நடிகர் விக்ரமின் மகன் ஆவார்.

துருவ் விக்ரம் கோயம்புத்தூரில் உள்ள ஜிஆர்டி கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அங்கு மாணவர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தில் இடம் பெற்ற 'உன் விழிகளில்...' என்ற பாடலை பாடி அசத்தி இருக்கிறார்.

தற்போது இந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.