சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு - ஓகஸ்ட் 25 வரை விளக்கமறியல் நீடிப்பு
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட இவர், 2022 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி வரை அப்பதவியில் நீடித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில் ஜனாதிபதி செலவு தொடர்பான விடயதானத்தின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேகநபர் சார்பில் 13-08-2026 அன்று முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிவான், விளக்கமறியலை நீடித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட இவர், 2022 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி வரை அப்பதவியில் நீடித்திருந்தார். அதன்பின்னர், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த அதே காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்தின் விசேட திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றி, ஜனாதிபதி செலவு தொடர்பான விடயதானத்தின் கீழ் இரு சம்பளங்களைப் பெற்றுக்கொண்டதாகவே இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.





