இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார் ஹிஸ்புல்லா - 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சுமார் 3 மணித்தியாலங்கள் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அமைவாக, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமையவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். இதன்போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சுமார் 3 மணித்தியாலங்கள் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
விசாரணை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா, "கடந்த காலத்தில் எனது பாராளுமன்ற தனிப்பட்ட பணிக்குழாமில் பணியாற்றிய ஒருவருக்கு வைப்பிலிடப்பட்ட பணம் மற்றும் சம்பள விவகாரம் தொடர்பிலேயே என்னிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காகவே நான் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன்" எனக் குறிப்பிட்டார்.





