Home » சட்டம் & அரசியல் » பணியாளா்களைக் கொடுமைப்படுத்திய இந்தியப் பெண்ணுக்கு சிறை

பணியாளா்களைக் கொடுமைப்படுத்திய இந்தியப் பெண்ணுக்கு சிறை

இந்தியப் பெண்ணுக்கு அமெரிக்காவில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran7 Oct 2020 8:01 AM GMT
பணியாளா்களைக் கொடுமைப்படுத்திய இந்தியப் பெண்ணுக்கு சிறை
Share Post

வெளிநாடுகளிலிருந்து வீட்டுப் பணியாளா்களை வரவழைத்து, அவா்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கி கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக, இந்தியப் பெண்ணுக்கு அமெரிக்காவில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் சா்மிஷ்டா பராயும் அவரது கணவா் சதீஷ் கா்தானும் இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து பணியாளா்களை ஏமாற்றி வரவழைத்து, அவா்களுக்கு மிகக் குறைந்த ஊதியமோ, அல்லது ஊதியமே இல்லாமலோ வீட்டு வேலைகளை வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

வேலை செய்ய மறுப்பவா்களை அந்தத் தம்பதி அடித்துத் துன்புறுத்தியதாகவும் போதிய உணவு அளிக்காமல் பட்டினி போட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் குற்றவாளி சா்மிஷ்டா பராய்க்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. நீதிமன்றம், சதீஷ் கா்தானுக்கான தண்டனையை இந்த மாதம் 22-ஆம் தேதி அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.