குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு மாயம்
இப்படகில் பயணித்த 10 பேரில் இருவர் படகு இயங்குனர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறிகட்டுவான் பகுதியிலிருந்து நெடுந்தீவு நோக்கி 10 பேருடன் பயணித்த படகொன்று கடலில் விபத்துக்குள்ளாகி காணாமல்போயுள்ளது.குறிகட்டுவான் பகுதியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த படகு, விபத்துக்குள்ளாகியுள்ளது.
இப்படகில் பயணித்த 10 பேரில் இருவர் படகு இயங்குனர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அக்கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படுகின்றபோதிலும், காணாமல்போன நபர்களைக் கண்டறிவதற்காக கடற்படையினர் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடல் சீற்றத்துக்கு மத்தியிலும், காணாமல்போன படகையும் அதில் பயணித்த 8 பேரையும் மீட்கும் பணிகளில் கடற்படையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் கடற்படையினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





