இலங்கையில் இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ள தாமதிப்பதற்கு பொருளாதார நிலை காரணம் - ஐ. நா.சனத்தொகை நிதியம்
குறிப்பாக நிலையான வேலைவாய்ப்பு, போதுமான வருமானம், மலிவு விலையில் வீடு மற்றும் குழந்தை பராமரிப்பு வசதிகள் கிடைப்பது முக்கியமானதாக இளைஞர்கள் கருதுகின்றனர்.
இலங்கையில் இளைஞர்கள் திருமணம் செய்துகொள்வதையும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதையும் தாமதிப்பதற்கு பொருளாதார நிலைமை உள்ளிட்ட பல காரணிகள் தாக்கம் செலுத்துவதாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
அதிகரித்த வாழ்க்கைச் செலவு, வீட்டு வசதியைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமம், போதிய வருமானம் இல்லாமை மற்றும் வேலைவாய்ப்பில் காணப்படும் நிலையற்ற தன்மை ஆகியவை இளைஞர்களின் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு தொடர்பான முடிவுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் திருமணம் அல்லது குழந்தைப்பேற்றை விரும்பவில்லை என்பதல்ல. மாறாக, பொருளாதார ரீதியாக ஓரளவு ஸ்திரமான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்ட பின்னர் குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நிலையான வேலைவாய்ப்பு, போதுமான வருமானம், மலிவு விலையில் வீடு மற்றும் குழந்தை பராமரிப்பு வசதிகள் கிடைப்பது முக்கியமானதாக இளைஞர்கள் கருதுகின்றனர்.
இதனால், இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மலிவு விலையில் வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை அதிகரித்தல், குழந்தைப் பராமரிப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் குடும்பத்துக்கு ஏற்ற பணிச்சூழலை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.





