Breaking News
கருணா அம்மானிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 4 மணி நேரம் விசாரணை
திணைக்கள அதிகாரிகள் அவரிடம் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணைகளை மேற்கொண்டு, வாக்குமூலத்தைப் பதிவுசெய்து கொண்டனர்.
கடத்தல் சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்காக, கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.
குற்றப்புல நாயக்கர் திணைக்களத்தினரால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கமைய 05-10-2026அன்று கருணா அம்மான், குற்றப்புடனாய்வுத் திணைக்களத்தில் பிரசன்னமாகி இருந்தார்.
இதன்போது திணைக்கள அதிகாரிகள் அவரிடம் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணைகளை மேற்கொண்டு, வாக்குமூலத்தைப் பதிவுசெய்து கொண்டனர்.
குறித்த விசாரணைகள் மற்றும் வாக்குமூலப் பதிவுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் நண்பகல் அளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.





