யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட வுக்கு குற்றப்பத்திரிகை
முறையற்ற விதத்தில் இலாபத்தைப் பெற்றுக்கொண்டதாக யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் 20-08-2026 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
2006 செப்டெம்பர் முதலாம் திகதி முதல் 2007 ஜூன் 08ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இலங்கை கடற்படையின் தளபதியாகக் கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் யோஷித ராஜபக்ஷவிற்கு பிரித்தானிய ரோயல் கடற்படை பயிற்சிக் கல்லூரியின் பயிற்சி பாடநெறியில் பங்கேற்பதற்கு முறைகேடாக வாய்ப்பளித்து, அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனூடாக முறையற்ற விதத்தில் இலாபத்தைப் பெற்றுக்கொண்டதாக யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக கடந்த ஜூலை 31ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து பிரதிவாதிகளுக்கு எதிராக 08 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





