Home » சட்டம் & அரசியல் » ஹைதி நாட்டில் சிறையில் கைதிகள் கலவரம் : 25 பேர் உயிரிழப்பு

ஹைதி நாட்டில் சிறையில் கைதிகள் கலவரம் : 25 பேர் உயிரிழப்பு

சில கைதிகள் நேற்று முன்தினம் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர்.

👤 Sivasankaran28 Feb 2021 5:28 AM GMT
ஹைதி நாட்டில் சிறையில் கைதிகள் கலவரம் : 25 பேர் உயிரிழப்பு
Share Post

ஹைதி நாட்டில் தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் கொடூர குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் 1500க்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சில கைதிகள் நேற்று முன்தினம் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர்.

கலவரம் நடந்த சிறைக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் கலவரத்தை கட்டுப்படுத்தி சிறை முழுவதையும் தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் சிறை அதிகாரி மற்றும் 6 கைதிகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.