Home » உலகச் செய்திகள் » தொடர்ந்தும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க முடியாது - பிரான்ஸ் பிரதமர்

தொடர்ந்தும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க முடியாது - பிரான்ஸ் பிரதமர்

பாடசாலைகளை மீண்டும் திறப்பதை பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்த்துள்ளனர்.

👤 Sivasankaran5 May 2020 4:14 PM GMT
தொடர்ந்தும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க முடியாது - பிரான்ஸ் பிரதமர்
Share Post

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், தொடர்ந்தும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க முடியாது என பிரான்ஸ் பிரதமர் எதுவார் பிலிப் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டத்தினை தளர்த்துவதற்கான திட்டவரைவை, நேற்று (திங்கட்கிழமை) செனட் சபையின் வாக்கெடுப்பிற்காக முன்வைத்த பின்னர், அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

'இது பெரும் சிக்கலான விமர்சனத்திற்குரிய நேரம். ஆனால் நாம் தொடர்ந்தும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க இருக்க முடியாது. ஊரடங்கு காலத்தில், ஒவ்வொரு குடிமகனும் தனது கடமையை நிறைவேற்றிப் பொறுப்புடன் நடந்து கொண்டமையால், அதன் பலனை நாம் பெற்றோம். கொரோனாப் பரவலைத் தடுத்துள்ளளோம்.

பாடசாலைகளைத் திறப்பது என்பது கல்வி, சமூக மற்றும் குடியரசு முன்னுரிமையாகத் தோன்றுகின்றது. இது வெளிப்படையாக எமது சுகாதாரப் பாதுகாப்புக்களுடன் சமரசம் செய்ய வேண்டி உள்ளது' என கூறினார்.

பிரான்ஸில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதை தவிர்த்து, பாடசாலைகளை மீண்டும் திறப்பதை பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்த்துள்ளனர்.