சசீந்திரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய ஆட்சேபனை
தற்போதைய குற்றப்பத்திரிகையின் கீழேயே வழக்கை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன 08.10.2026 அன்று உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அத்துடன், தற்போதைய குற்றப்பத்திரிகையின் கீழேயே வழக்கை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன 08.10.2026 அன்று உத்தரவிட்டுள்ளார்.
2022 மே 09 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளின் போது, செவனகல - கிரிஇப்பான்வெவ பகுதியில் மஹாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டடம் சேதமடைந்ததாகக் கூறி, இழப்பீடாக 8.85 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்வதற்காக அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தனர் என குறித்த மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.





