பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான தடுப்புக்காவல் நிலையமாக மத்திய குற்ற புலனாய்வுப்பிரிவு
தடுப்புக்காவல் நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய குற்றப்புலனாய்வுப்பிரிவானது கொழும்பு 05 இல் உள்ள தொழிலாளர் செயலகக் கட்டடத்தின் 7 ஆம் மாடியில் அமைந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கொழும்பிலுள்ள மத்திய குற்றப்புலனாய்வுப்பிரிவானது பயங்கரவாதத்தடை சட்டத்தின் கீழான தடுப்புக்காவல் நிலையமாக உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 2509/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் 9 ஆம் பிரிவின்கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கொழும்பிலுள்ள மத்திய குற்றப்புலனாய்வுப்பிரிவை பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழான ஒரு தடுப்புக்காவல் நிலையமாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
தடுப்புக்காவல் நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய குற்றப்புலனாய்வுப்பிரிவானது கொழும்பு 05 இல் உள்ள தொழிலாளர் செயலகக் கட்டடத்தின் 7 ஆம் மாடியில் அமைந்துள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலில் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





