ஷிரந்திக்கு தனியார் மருத்துவமனைக்கு செல்ல அனுமதி மறுப்பு
முதலாவது சந்தேக நபரான பிரதீப் கரியவசமை நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவிருந்த நிலையில், அவரை தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை இடம்பெறாது எனவும், சிறைச்சாலை மருத்துவரின் பரிந்துரைக்கு அமைய, அவர் இன்று (9) தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுல்ல சிரந்தி ராஜபக்ஷவை காண 08-10-2026 அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கு வருகைத்தந்திருந்தார்.
சிரிலிய சவிய அமைப்பு ஊடாக கொழும்பு கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு சிரி ஸ்கேன் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதாக கூறி, அரச வங்கி ஒன்றிலிருந்து சுமார் 10 மில்லியன் ரூபா பணத்தை பெற்று, அதனை சொந்தத் தேவைகளுக்காகத் தவறாகப் பயன்படுத்தி பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகத் தெரிவித்து, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கடந்த 7ஆம் திகதியன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதே விசாணைக்குத் தொடர்புடைய, குறித்த அரச வங்கியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவருமான பிரதீப் காரியவசமும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேற்படி சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட தன் பின்னர் , நேற்று முன்தினம் பிற்பகல் அளவில் கொழும்பு மேலதிக நீதிவான் தர்ஷிமா பிரேமரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது, முதலாவது சந்தேக நபரான பிரதீப் கரியவசமை நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது. எனினும், பொதுச் சொத்துச் சட்டத்தின் பிரகாரம் பிணை வழங்குவதற்கான விசேட காரணங்களை முன்வைக்கத்தவரியதால், ஷிரந்தி ராஜபக்சவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் சிறைச்சாலையின் மகளிர் பிரிவில் உள்ள பாதுகாப்பானதொரு சிறைப்பகுதியில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவிற்கமைய அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்குவதற்காக நேற்று அவரை கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், சிறைச்சாலை வைத்தியரின் பரிந்துரை மற்றும் ஆலோசனையின் அடிப்படையில், ஷிரந்தி ராஜபக்சவை தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார் எனவும், சிறைச்சாலை மருத்துவரின் எழுத்துமூலப் பரிந்துரைக்கு அமைய, ஷிரந்தி ராஜபக்ச கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான செனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை மற்றும் நலம் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கு நேரடியாக வருகை த்தந்திருந்தார்.
அத்தோடு கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ஷிரந்தி ராஜபக்ச, ஒக்டோபர் 5 ஆம் திகதி இரவு நாடு திரும்பியிருந்தார். தன்னை கைது செய்வதை தடுத்துக் கோரி அவர் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் குறித்த மனு எதிர்வரும் 12 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





