ஐந்து வழக்குகள் தொடர்பில் சாமர சம்பத்துக்கு விளக்கமறியல்
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணி சமர்ப்பித்த வாதங்களை கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்கவை, இலஞ்ச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு தாக்கல் செய்த ஐந்து வழக்குகள் தொடர்பாக, இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் சந்திம வீரக்கொடியிடம் 6 மணிநேரம் விசாரணை உத்தரவிட்டது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணி சமர்ப்பித்த வாதங்களை கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சாமர சம்பத் தசநாயக்க, ஆரம்ப கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், பொஸ்பேட் ஏற்றுமதி உரிமங்களை வழங்குவதற்காக இரண்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து 8.1 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.