பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஃபெர்னி நகர மேயராக ஹர்ஷன் ராமதாஸ் தேர்வு
ஃபெர்னி நகரில், சக நகராட்சி மன்ற உறுப்பினரான கைல் ஹாமில்டனை தோற்கடித்த ராமதாஸ், 1,524 வாக்குகளைப் பெற்றார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் மேயர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிறந்த ஹர்ஷன் ராமதாஸ், ஃபெர்னி நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுரிந்தர்பால் ரத்தோர், வில்லியம்ஸ் லேக் நகர மேயராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2026-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்காக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண மக்கள் சனிக்கிழமை வாக்களித்தனர்.
ஃபெர்னி நகரில், சக நகராட்சி மன்ற உறுப்பினரான கைல் ஹாமில்டனை தோற்கடித்த ராமதாஸ், 1,524 வாக்குகளைப் பெற்றார். இது பதிவான மொத்த வாக்குகளில் 54.5 சதவீதமாகும். ஹாமில்டன் 1,194 வாக்குகளைப் பெற்றார்.
வில்லியம்ஸ் லேக் நகரில், 2,116 வாக்குகளைப் பெற்று ரத்தோர் இரண்டாவது முறையாக மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தமது எதிராளியான வால்ட் கோப்பை 1,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.





