சவூதி அரேபியாவை விட்டு வெளியேற அமெரிக்கா தூதர்களுக்கு உத்தரவு
சமீபத்திய தாக்குதல்களில், சவூதி அராம்கோ நிறுவனத்தின் ஷைபா எண்ணெய் வயலில் நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
ஈரானுடன் நெருக்கமான தொடர்புடைய ஹூத்தி படையினர் ஏமனிலிருந்து நடத்தும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால், அமெரிக்கா தனது தூதர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சவூதி அரேபியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தின் பிற நாடுகளிலும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா தயாராகி வருகிறது.
சமீபத்திய தாக்குதல்களில், சவூதி அராம்கோ நிறுவனத்தின் ஷைபா எண்ணெய் வயலில் நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தம்மாம் வானூர்தி நிலையமும் தாக்கப்பட்டது. இதனால் பலர் உயிரிழந்ததுடன், பலரும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வுகள், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இசுரேலும் நடத்தும் போரால் தீவிரமடைந்துள்ள பரந்த பிராந்திய மோதலைப் பிரதிபலிக்கின்றன. இதனால் நிலையற்ற சூழல், பாதுகாப்புக் கவலைகள், எரிசக்திக் கட்டமைப்புகளிலும் பயணப் போக்குவரத்திலும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.





