Home » கேளிக்கை » மீண்டும் இணையும் பாரதிராஜா & இளையராஜா

மீண்டும் இணையும் பாரதிராஜா & இளையராஜா

இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமாரின் கதையை பாரதிராஜா இயக்கவுள்ளார்.

👤 Sivasankaran3 Aug 2020 3:56 PM GMT
மீண்டும் இணையும் பாரதிராஜா & இளையராஜா
Share Post

பாரதிராஜாவும் இளையராஜாவும் கடைசியாக 1992-ல் நாடோடி தென்றல் படத்தில் பணிபுரிந்தார்கள். 28 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணையவுள்ளார்கள்.

மீண்டும் ஒரு மரியாதை படத்துக்கு அடுத்ததாக, ஆத்தா என்கிற படத்தை இயக்கவுள்ளார் பாரதிராஜா. கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்த பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமாரின் கதையை பாரதிராஜா இயக்கவுள்ளார். இப்படத்துக்கு இசை - இளையராஜா.

28 வருடங்களுக்குப் பிறகு பாரதிராஜா - இளையராஜா மீண்டும் இணைவதால் படத்தின் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.