Home » உலகச் செய்திகள் » வட மேற்கு ஆப்பிரிக்காவில் பெனின் கடற்பகுதியில் கடத்தப்பட்ட இந்தியக் கப்பல் விடுவிப்பு.

வட மேற்கு ஆப்பிரிக்காவில் பெனின் கடற்பகுதியில் கடத்தப்பட்ட இந்தியக் கப்பல் விடுவிப்பு.

இந்திய நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்று நைஜீரியாவில் சில நாட்களுக்கு முன்பு காணாமல்...

👤 Saravana Rajendran7 Feb 2018 5:47 AM GMT
வட மேற்கு ஆப்பிரிக்காவில் பெனின் கடற்பகுதியில் கடத்தப்பட்ட இந்தியக் கப்பல் விடுவிப்பு.
Share Post

இந்திய நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்று நைஜீரியாவில் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இது குறித்து இந்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், இந்த கப்பல் காணமல் போனது குறித்த எந்த விபரமும் தெரியாமல் இந்திய அரசு தினறியது. மேலும் பெனின் மற்றும் நைஜீரிய கடற்பகுதியில் உள்ள கடற்கொள்ளையர்கள் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.
மும்பையைச் சேர்ந்த 'ஆங்கிலோ -ஈஸ்டர்ன்' கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் கடந்த பிப்ரவரி 1ம் தேதி காணாமல் போனது. அந்த கப்பல் 13,500 டன் எரிபொருளை சுமந்து சென்று இருக்கிறது. இதில் 22 இந்தியர்களும், சில வெளிநாட்டினரும் பயணித்துள்ளனர்
முதலில் இந்த கப்பலுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. பின் இந்த கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.பேரம்
கடந்த 3 நாட்களாக இதற்காக பேரம் பேசப்பட்டது. அவர்கள் கேட்ட தொகை கடைசியில் அந்த மும்பை கப்பல் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டது. எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படவில்லை
கப்பற்படையை வைத்துள்ளோம் என்று கூறிக்கொள்ளும் இந்திய அரசை ஒரு சாதரண கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பலை மீட்காமல் அவர்களின் மிரட்டலுக்கு பயந்து கப்பல் மீட்கப்பட்டுள்ள விவகாரம் இந்திய கப்பல் நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.