மறைந்த நடிகர் விஜயகாந்த் வீட்டில் விஜய், கோட் படக்குழுவினர் அஞ்சலி
கடந்த 19-ம் தேதி வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
கோட் இயக்குனர் வெங்கட் பிரபு, தளபதி விஜய் மற்றும் படக்குழுவினர் சமீபத்தில் மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்று தங்கள் படத்திற்காக ஆசி பெற்றனர். விஜயகாந்த் கோட் படத்தில் செயற்கை நுண்ணறிவு மூலமாக ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இதற்காக விஜயகாந்தின் மனைவியும் அரசியல்வாதியுமான பிரேமலதாவிடம் இயக்குநர் அனுமதி கோரியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 19-ம் தேதி வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க) தலைவராக இருக்கும் பிரேமதா தனது முந்தைய நேர்காணல் ஒன்றில் இதைப் பற்றி மனம் திறந்திருந்தார், "வெங்கட் பிரபு எங்கள் வீட்டிற்கு 4-5 முறை வந்து என் மகன் சண்முகபாண்டியனுடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார். என்னைச் சந்திக்குமாறும் கேட்டுக்கொண்டார். அண்மையில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை சென்றிருந்தபோது சந்தித்தோம். கோட் படத்தில் ஒரு காட்சியில் கேப்டன் விஜயகாந்தை நேரடியாகக் கொண்டு வர விரும்பியதாக அவர் விளக்கினார். அவர்கள் எங்களிடம் அனுமதி கேட்டனர். விஜய் என்னை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.





