Home » கேளிக்கை » தர்பார் படத்தில் நடித்த ரஜினிகாந்த் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது

தர்பார் படத்தில் நடித்த ரஜினிகாந்த் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது

இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்பை வலுப்படுத்தினர்.

👤 Sivasankaran25 July 2019 3:47 PM GMT
தர்பார் படத்தில் நடித்த ரஜினிகாந்த் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது
Share Post

தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே ரஜினிகாந்துக்கு போலீஸ் சீருடை அணிவித்து ஸ்டூடியோவில் வைத்து 'போட்டோ சூட்' நடத்திய புகைப்படம் இணையதளத்தில் வெளியானது.

இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்பை வலுப்படுத்தினர். செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. கடும் பாதுகாப்பையும் மீறி தற்போது மீண்டும் ரஜினிகாந்த் வடமாநில போலீஸ் உடையில் நடந்து வரும் காட்சிகள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

இதைக் கண்டு படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். எப்படி இந்த படங்கள் வெளியாகின என்ற விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.